விக்ரம் படத்தை விட தளபதி 67 பயங்கரமாக இருக்கும் – லோகேஷின் நெருங்கிய நண்பர் தகவல்.!

lokesh and vijay
lokesh and vijay

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி உள்ளார். லோகேஷ் கனகராஜ் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் மாபெரும் ஆக்சன் படத்தை உருவாக்கினார் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஒரு புதிய சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறார் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 வது திரைப்படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் என்ற தகவல் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. லோகேஷ் இதுவரை ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரை படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தளபதி 67 திரைப்படமும் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் எனவும் விஜய் வேற லெவலில் மிரட்டுவார் எனவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் லோகேஷின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி 67 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக இருக்கும் 100% இயக்குனர் லோகேஷின் படமாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறியுள்ளதால் இந்த படம் நிச்சயம் ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் விக்ரம் படத்திற்கு பிறகு இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த செய்தியை இணையதள பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.