ரத்தம் சொட்ட சொட்ட வெளியானது தளபதி 67 விஜயின் புதிய போஸ்டர்.!

vijay-67
vijay-67

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வளம் வருகிறார் இவர் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் கலவையான விமர்ச்சனகளை கொடுத்தார்கள். மேலும் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதியது.

இந்த இரண்டு திரைப்படங்களின் வெளியிட்டால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தார்கள் இந்த நிலையில் தளபதி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை பட குழு சமீபத்தில் வெளியிட்டது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

தளபதி 67 திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் அதேபோல் விஜய்யுடன் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க திரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை மன்சூர் அலிகான்,  சஞ்சய் தத் , ஆக்ஷன் கிங் அர்ஜுன்,  இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் மேனன், பிரியா ஆனந்த் ,சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை முழுக்க முழுக்க தனது ஸ்டைலில் எடுக்க இருக்கிறார். நடிகைகளுக்கும் பாடல்களுக்கும் பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் நாளை 5 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள் பட குழு. அதற்காக விஜயின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு அந்த போஸ்டரில் விஜய் உடம்பிலிருந்து ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கிறது. இந்த போஸ்டர் அதிக வரவேற்பு பெற்று லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறது.