தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. வெறும் 50 சதவிகித திரையரங்கு இருக்கைகளுடன் வெளியான இந்த திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது.
விஜய்க்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு பக்கமும் அதிக ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் ஒரு காலகட்டத்தில் விஜய்க்கு தெலுங்கு மார்க்கெட்டே இல்லாமலிருந்தது. ஆனால் தற்பொழுது 20 முதல் 30 கோடி வரை வசூல் செய்யுமளவிற்கு விஜயின் தெலுங்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.
அதிலும் கடைசியாக வெளியாகிய பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தெலுங்கிலும் விஜயின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது. கேரளா மற்றும் தெலுங்கில் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.
தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு என்பவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படத்தை தயாரித்து வருகிறார் தமிழில் சன் பிக்சர் எப்படி பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமும் அதேபோல் தெலுங்கில் தில் ராஜ் நிறுவனம் மிகவும் பிரமாண்ட நிறுவனம்.
பவன்கல்யாண், ராம்சரண், பிரபாஸ் ஆகியோர்களை வைத்து ஒரே நேரத்தில் படத்தை தயாரித்து வரும் நிறுவனம்தான் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ். இதுதான் தில் ராஜ் நிறுவனம். சமீபகாலமாக விஜய்யின் வெற்றி திரைப்படங்களை பார்த்த தில் ராஜி சமீபத்தில் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தளபதி 67 திரைப்படத்தை தயாரிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அதில் விஜய்க்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் தருவதாகவும் படத்தை மிகப் பெரிய ஃபேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்ய உத்தரவாதம் கொடுத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது எந்த அளவு உண்மை என்பது விஜய் தரப்பில் இருந்து ஏதாவது வெளியேறினால்தான் தெரியவரும்.