தளபதி விஜய் தற்போது நேசன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திலிருந்து அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
இந்த நிலையில் அடுத்ததாக இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் முடிந்த உடன் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் இதற்கிடையில் தளபதி 67 ஆவது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது பெரும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய்யை வைத்து ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்ததாக இணைய போகலாம் என பலரும் கூறி வந்த நிலையில் இந்தத் திரைப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் தளபதி 67 படத்தில் விஜ்ஜையுடன் இரண்டாவது முறையாக இணைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது தளபதி 67 குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ஆனால் இன்னும் உறுதியாக எதுவும் வெளிப்படையாக சொல்ல வில்லை எனவும் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அப்படி உறுதியானால் அதன் தயாரிப்பு நிறுவனமே வெளியிடும் என கூறியுள்ளார்.