தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது இந்த திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்கிய இருந்தார். மேலும் இந்த திரைப்படத்துடன் அஜித் நடிப்பில் உருவாகிய துணிவு திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாட்டமாககண்டு மகிழ்ந்தார்கள். இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
தற்காலிகமாக தளபதி 67 என பெயர் வைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடிக்க இருக்கிறார் இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் இணைவதால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் திரிஷா.
மேலும் தளபதி 67 திரைப்படத்தில் மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மாத்யூ, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தை லலித்குமார் அவர்கள் தான் தயாரித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதற்காக விஜய் மற்றும் திரிஷா ஆகிய பட குழுவினர்கள் அனைவரும் காஷ்மீரில் சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில் தளபதி 67 குறித்த அப்டேட்கள் மூன்று நாட்களாக வெளிவந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் நேற்று தளபதி 67 திரைப்படத்தின் பூஜை வீடியோவை படகுழு வெளியிட்டது அதில் விஜயுடன் ஒரு குட்டி குழந்தை இருக்கிறார் அவர் யார் என்று கேள்வி அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் பிரபல நடிகரின் மகள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
காதலில் சோதப்புவது எப்படி, டிக் டிக் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த அர்ஜுனன் என்ற நடிகரின் மகள் தான் அவர் மகளின் பெயர் இயல் இவர் தான் தற்பொழுது தளபதி 67 திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இருக்கிறார். இந்த சந்தோஷமான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நடிகர் அர்ஜுனன்.
இதற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் அர்ஜுனன் அவர்களுக்கு இடம் மற்றும் இயல் என்ற இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள் இவர்கள் இருவருமே தற்பொழுது சினிமாவில் நடித்து வருகிறார்கள் அர்ஜுனனின் மகன் இலன் நயன்தாராவின் o2 திரைப்படத்தில் மற்றும் கவின் நடிப்பில் உருவாகி வரும் டாடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
மற்றொரு மகள் இயல் அருண் விஜய் உடன் அச்சம் என்பது இல்லையே விஜயின் தளபதி 67 ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.