தளபதி 67-ல் கைதி 2 நடிகரா.? இதோ அவரே கூறிய தகவல்.! கார்த்தி இல்லிங்கோ வைரலாகும் வீடியோ.!

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை தில் ராஜா அவர்கள் இயக்கியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார் பிரபு, குஷ்பூ என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தளபதியின் வாரிசு திரைப்படத்தின் அறிவிப்பு வருகிறதோ இல்லையோ தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் சாயலில் இந்த திரைப்படம் முழுமையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தை  பற்றிய செய்திகள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில்  இந்த திரைப்படத்தில் திரிஷா, சமந்தா ,கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று ஹீரோயின் நடிக்க இருப்பதாகவும் கௌதமேனன், பிருத்திவிராஜ், சுகுமாரன் நிவின்பாலி மிஸ்கின் என பல முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 67 திரைப்படத்திற்கு அனிருத் தன் இசையமைக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் யுனிவர்ஸ் கேரக்டர்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் விக்ரம் படத்தில் நடித்த கமலஹாசன் கதாபாத்திரம் அல்லது சிறப்பு தோற்றத்தில் இடம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கைதி திரைப்படத்தில் டெல்லி கேரக்டர் விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் என லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் கேரக்டர்கள் இடம்பெறன அதேபோல்  இந்த திரைப்படத்திலும் அமைய அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்திக் நரேன் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு கார்த்திக் நரேன் விளக்கம் அளித்துள்ளார்.

thalapathy 67 news
thalapathy 67 news

இந்த நிலையில் கார்த்திக் நரேன்  தளபதி 67 திரைப்படத்தை பற்றி கூறிய பொழுது இந்த திரைப்படத்தில் நான் இல்லை என்றும் ஒருவேளை நான் அந்த திரைப்படத்தில் இருந்தால் யுனிவர்ஸ் முற்றிலுமாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் கைதி இரண்டாவது பாகத்தில் நான் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.