நடிகர் விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தப் படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது. மேலும் வாரிசு திரைப்படத்திற்காக தற்போது போஸ்ட் ப்ரோடேஷன்பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தை முடித்தவுடன் அடுத்ததாக விஜய் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இருக்கிறார்.
இவர்களது கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு மும்பை கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அது உறுதிப்பட்ட தகவலாக இன்னும் வெளியாகவில்லை.
அது தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடிக்கடி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தளபதி 67 பக்கா ஆக்சன் திரைப்படம் என்று கூறி வருகிறார் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் வில்லனாக நான்கு நடிகர்கள் நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதில் சஞ்சய் தத்து, பிரித்திவிராஜ், அர்ஜுன், ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை.
அதனை தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் மிஸ்கின் அவர்கள் நடிப்பதாக அவரே ஒரு பேட்டியில் மறைமுகமாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் இரண்டு இயக்குனர்கள் வில்லனாக நடிப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் உறியடி விஜயகுமார் ஆகியோர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது இதற்கான அறிவிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பொங்கல் தினத்தை முன்னிட்டு அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. தற்போது விஜயின் வாரிசு படம் வெளிவர காத்திருப்பதால் தளபதி 67 குறித்து எந்த ஒரு அப்டேட்டும் தற்போது எங்களால் வெளியிட முடியாது என்றும் கூறிவிட்டார்.