80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவர் நடிகர் நவரச நாயகன் கார்த்திக். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக்கும் திரைப்படம் தளபதி 67.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் நான்கு வில்லன்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் ஒருவர் தான் நம்ம நவரச நாயகன் கார்த்திக்.
தளபதி 67 திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க அவரிடம் லோகேஷ் கனகராஜ் கதையை கூறி இருக்கிறார். ஆனால் கதை கேட்பதற்கு முன்பாக நவரச நாயகன் நான் படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் என்ன காரணம் கேட்டிருக்கிறார் அதற்க்கு விளக்கம் அளித்த கார்த்திக் என்னுடைய உடல்நிலை சரியில்லை தம்பி அதனால் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
அது மட்டுமல்லாமல் தனது கால் வலியால் தற்போது கார்த்திக் அவர்கள் பிசியோதெரபி செய்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் என்னால் ஒரு மணி நேரம் கூட நிற்க முடியாது அப்படி மீதி நின்றால் எனக்கு மிகவும் அதிகமாக கால் வலிக்கும் என்று கூறிவிட்டாராம் இந்த காரணத்தை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டார்களாம்.
அதன் பிறகு தான் இந்த படத்தில் வில்லனாக நடிகர் மிஸ்கினை அணுகி உள்ளார் லோகேஷ் கனகராஜ். நவரச நாயகன் இந்த படத்தில் நடித்தாள் மிகவும் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர். மட்டுமல்லாமல் இந்த காரணத்தை அறிந்த ரசிகர்கள் அவருடைய உடல்நிலை சீக்கிரம் சரியாக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். கதை பிடித்தும் நடிக்க முடியாமல் போனது அவருக்கும் வருத்தம் அளிக்கிறது ரசிகர்களுக்கும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.