தளபதி 67 திரைப்படத்தில் இணையும் முன்னணி நடிகர்.! எகிறும் எதிர்பார்ப்பு…

thalapathy
thalapathy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கிய இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வாரிசு படத்தில் இருந்து இந்த வாரம் அப்டேட் வெளியாகும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது இந்த தகவல் அறிந்து குஷியில் இருக்கும் ரசிகர்களுக்கு மேலும் அவர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஷால் அவர்கள் நடிக்க உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஷாலின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக  கூறப்படுகிறது.

இதனால் விஷால் நடித்தாள் வில்லனாக நடிப்பாரா இல்லை விஜய்க்கு கை கொடுத்து உதவும் நண்பராக நடிப்பாரா என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் விஷால் நடித்தால் மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிரும் என கூறப்படுகிறது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 திரைப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் விஷால் நடிக்கப் போகிறார் என்ற உடனே ரசிகர்கள் மேலும் குஷியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 67 திரைப்படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், திரிஷா, நடிக்கிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து மேலும் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரித்திவிராஜ், சஞ்சய் தத், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.