தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் தற்போது எண்ணூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து..
தனது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அதற்கான வேலைகளில் தான் தற்போது லோகேஷ் தீவிரம் காட்டி தருகிறார். தளபதி 67 படத்தில் மொத்தம் ஐந்து வில்லன் நடிக்க உள்ளனர் அதில் முக்கியமாக அர்ஜூன், கௌதம் மேனன் நடிக்கின்றனர். மேலும் கதைக்கு ஏற்றபடி மற்ற மூன்று வில்லன்களையும் தட்டி தூக்கி வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தின் பூஜை விரைவில் போடப்படும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜயின் திரைப்படங்களில் தற்போது மல்டி ஸ்டார் ஹீரோக்கள் நடிக்கின்றனர். அந்த வகையில் தளபதியா 67 திரைப்படத்தில் பலர் நடிக்க இருக்கின்றனர் இந்த படத்தில் வில்லனாக மூன்றெழுத்து ஸ்டார் ஒருவர் கமிட்டாக இருக்கிறாராம் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல ரீ என்ட்ரி கொடுத்து.
மாநாடு, வெந்து தணிந்தது கார்டு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார் சிம்பு தான் தளபதி 67 படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் லோகேஷ் கனகராஜ் வெளியீடு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்ததாக கமலின் படங்களில் இவர் இணைய வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் அண்மையில் பேட்டி ஒன்றில் உலகநாயகன் கமலஹாசன் சொல்லி உள்ளது என்னவென்றால் நிச்சயம் சிம்புவை தன் படத்தில் நடிக்க வைப்பேன் உறுதி அளித்துள்ளார் அப்படியென்றால் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.