தற்போது நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது.
மேலும் நடிகர் விஜய் வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்த லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் இந்த திரைப்படம் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கி உள்ளனர். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என அடுத்தடுத்து இடங்களில் நடந்துள்ளது.
இந்த நிலையில் தளபதி 66 திரைப்படமான வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி கொண்டு இருந்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த அவருடைய ரசிகர்கள் இது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை யாரும் எடுக்க கூடது எனவும் இதனால் படத்தின் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடும் எனவும் கூறி ஒரு கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் அவர்கள் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் அதாவது தளபதி 67 திரைப்படத்தில் மேலும் ஒரு புதிய கேரக்டர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யுடன் ஒரு நாய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது மேலும் அந்த நாயின் உரிமையாளரை இது பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மோகன்லால் உள்ளிட்டர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் ஒரு நாய் விஜயுடன் சேர்ந்து நடித்தால் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Thalapathy67 Shooting Starts From December 💥 @actorvijay #Varisu pic.twitter.com/URcpf1Mr0b
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 29, 2022