தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் படபிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே கிட்டத்தட்ட வியாபாரம் முடிந்து விடும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இவ்வாறு இந்த படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையிலும் வெளிவரவில்லை என்றாலும் தற்பொழுது அந்தப் படத்திற்கான வியாபாரம் சுமார் 240 கோடிக்கு நடந்து விட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் புத்திசத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ரூபாய் 160 கோடிக்கும் அதே போல் சேட்டிலைட் உரிமையை சன் டிவி ரூபாய் 80 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இந்த படத்தினை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை மேலும் பூஜை கூட போடாத நிலையில் அதற்குள் 240 கோடிக்கு வியாபாரம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நடிகர் விஜய்யை தொடர்ந்து இந்த படத்தில் சஞ்சய்தத், கௌதமேனன், நிவின் பாலி, திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், மிஸ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என படக் குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.