“தளபதி 67” படத்தில் இதுயெல்லாம் இருக்கு.. தரமான அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!!

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் வாரிசு. அதுவும் அடுத்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.  வாரிசு படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.

இதில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக  அவருடன் கைகோர்த்து பிரகாஷ்ராஜ் ராஷ்மிகா வந்தனா சரத்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

அந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் உலக நாயகன் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் வந்தால் தளபதி 67 படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நரேன் சமீபத்திய பேட்டியில் தளபதி 67 படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தளபதி 67 திரைப்படம் லோகேஷ் சினிமாடிக்ஸ் யுனிவர்ஸ் முறையில் தான் அமைய உள்ளது ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை.. கார்த்தியின் கைதி 2 படத்தில் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இவர் சொல்லும் பதிலை பார்த்தால் தளபதி 67 திரைப்படத்தில் கைதி மற்றும் விக்ரம் படத்தில் நடித்த பல டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது இதனால் இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் என தெரிய வருகிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..