தமிழ் சினிமாவில் விரல்களை விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் பெற்றுள்ளது.
அப்படி இவர் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல லாபம் பார்த்தது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் கமல் அவர்கள் பட குழுவினருக்கு பைக்கில் இருந்து கார் முதல் அனைத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அந்த பத்திரிகையாளர் லோகேஷ் கனகராஜ் இடம் தளபதி 67 குறித்து ஏதாவது அப்டேட் சொல்லுங்க சார் என்று கூறியுள்ளார் அதற்கு லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இந்த தகவல் வெளியான உடனே ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பத்திரிகையாளர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கைதி படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தளபதி 67 படத்தை முடித்தவுடன் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
#EXCLUSIVE | ‘டிசம்பரில் தளபதி 67 அப்டேட் வரும்' – லோகேஷ் கனகராஜ்#SunNews | #Thalapathy67 | #Kaithi2 | @Dir_Lokesh pic.twitter.com/UU1C9ePZeV
— Sun News (@sunnewstamil) October 26, 2022