தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிட்டு படக்குழு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியாகிய ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் சினிமா நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் என அனைவரும் பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த திரைப்படத்தை தில் ராஜி தயாரிக்க இருக்கிறார். பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
சரத்குமார் இந்த திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த திரைப் படத்தில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் தளபதி 66 திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைக்க இருக்கிறார்.
தளபதி 66 திரைப்படத்தின் பூஜையில் தளபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா வரும் காட்சிகளை வீடியோவாக இயக்குனர் வம்சி தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.