தளபதி 66 ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

தளபதி 66 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

தளபதி விஜய் கடைசியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது அதேபோல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அரபிகுத்து பாடலுக்கு பல நடிகைகள் நடிகர்கள் என  நடனமாடும் வீடியோவே வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவிற்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் அதனை தளபதி 66 படத்தின் பூஜையில் அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் சரத்குமார் ராஷ்மிகா மந்தனா ஆகியவர்கள் இணைந்துள்ளதை பார்த்திருப்போம் இந்த நிலையில் நடிகர் பிரபு அவர்களும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் இவர் ராஷ்மிகா வின் அப்பாவாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

மேலும் தற்பொழுது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படகுழு அந்த போஸ்டரில் தளபதி 66 திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் இந்த பொங்கல் தளபதி பொங்கல் எனவும் கூறி வருகிறார்கள்.

thalapathy 66 update
thalapathy 66 update

இதற்கு முன் விஜய்யின் திரைப்படங்களான திருப்பாச்சி, நண்பன் போக்கிரி,மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தளபதி 66 திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.