தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றது ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது.
பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் விஜய் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துவிட்டார் எப்படியாவது விட்டதை பிடிக்க வேண்டும் என அதிகமாக இந்த திரைப்படத்தில் மெனகேடுவார் என கூறப்படுகிறது மேலும் நெல்சன் இயக்கிய இத்திரைப்படத்தில் கதை சரியில்லை என பலரும் கருத்து கூறி வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் நெல்சனை திட்டித் தீர்த்தார்கள்.
இந்த நிலையில் அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது அந்த பூஜை படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார் விஜய் மற்றும் சிலர் கலந்து கொண்டார்கள். இயக்குனர் வம்சி இயக்கும் இந்த திரைப்படத்தில் மூத்த நடிகரான மோகன் இரண்டாம் கட்ட கதாநாயகனாக என்னால் நடிக்க முடியாது என மறுத்துள்ளார்.
அதாவது தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதற்கு முதன்முதலில் மோகன் அவர்களிடையே படக்குழு அணுகியுள்ளது ஆனால் மோகன் இரண்டாம் கட்ட கதாநாயகனாக என்னால் நடிக்க முடியாது என தளபதி 66 திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் ஷாம் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். நடிகர் ஷாம் முதன்முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால் சமீபகாலமாக அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.
இடைப்பட்ட காலத்தில் வில்லனாகவும் நடித்து பார்த்தார் ஆனால் அந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென விஜய்திரைப்படம் என்றதும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். பொதுவாக ஒரு நடிகர் வில்லன் கதாநாயகன் என்ற கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றால் அப்பா அண்ணன் தம்பி என கிடைத்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஷாம் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஆனாலும் ஒரு சில இளம் நடிகர்கள் விஜய் உடன் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள் அந்த லிஸ்டில் தற்போது இணைத்துள்ளார் ஷாம். இருந்தாலும் மோகன் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது எனக் கூறியது ரசிகர்களுடைய கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.