தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் நடித்து உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கெளரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, திரையரங்கு திறந்தவுடன் விஜய் ரசிகர்களுக்கு விருந்து தான். இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை முடித்தவுடன் அடுத்ததாக மெர்சல் திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனண்டால் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க இருக்கிறார் தளபதி விஜய். இதனை சமீபத்தில் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மெர்சல் திரைப்படத்தை அட்லி தான் இயக்கியிருந்தார் மெர்சல் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது ஆனால் படம் தொடங்கியதிலிருந்து அட்லி செய்த குளறுபடியால் சிறிது சரிவை சந்தித்தது தயாரிப்பு நிறுவனம், அதன்பிறகு மெர்சல் திரைப்படத்தால் கிடைத்த லாபத்தின் மூலம் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வந்தது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.
இந்த நிலையில் மீண்டும் அகலக்கால் வைக்க இருக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்,. மீண்டும் அதே தவறை செய்ய இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பிக்பாஸ் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிறுவனத்துடன் கூட்டணி வைக்க இருக்கிறார்களாம்.
தளபதி 66 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் உருவாக இருக்கிறதாம் இந்த திரைப்படத்தை ஸ்ரீ தெனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அதுமட்டுமில்லாமல் படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் மகிழ்தருமேனி பெரிய பட்ஜெட் படத்தை இயக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.