தளபதி 65: படக்குழுவே வெளியிட்டால் கூட இப்படி ஒரு போஸ்டரை வெளியிட முடியாது ரசிகர்கள் உருவாக்கிய கொலை மாஸ் புகைப்படம்.!

thalapathy-65-poster

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வசூலில்  பல கோடிகளை குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக வெளியாகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக வெளியாகிய மாஸ்டர் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மேலும் மாஸ்டர் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளிவராது என கூறிய நிலையில் தளபதி விஜய்  திரையரங்கில் ரசிகர்கள் ரசிக்கும் படி தான் திரைப்படத்தை வெளியிடுவோம் என கூறினார் அதேபோல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

thalapathy-65-poster
thalapathy-65-poster

அதுவும் 50 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது அதுமட்டுமில்லாமல் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராகவும் பணியாற்ற இருக்கிறார் இந்தநிலையில் தளபதி 65 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாநாள் எப்படி இருக்கும் என தத்ரூபமாக ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.

அந்த போஸ்டரில் ரசிகர்கள் தளபதி 65 திரைப்படத்திற்கான போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள் மேலும் தேர்தல் நெருங்கி விட்டதால் படத்தை மே மாதம் அல்லது ஏப்ரல் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கயிருக்கிறார்கள் படக்குழு.

thalapathy-65-poster