தளபதி 65 ஆவது திரைப்படத்தை கோலமாவு கோகிலா நயன்தாராவை வைத்து இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இளையதளபதி விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கயிருக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை எப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் டாக்டர் திரைப்படம் அடுத்த வருடம் தான் வெளிவரும் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்னரே தளபதி படத்தில் கமிட்டாகி விட்டார் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் இவரிடம் உங்களது அடுத்த படம் எப்படி இருக்கும் என கேட்டபோது அவர் தனது அடுத்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதை கொண்ட திரைப்படம் தான் என்று கூறியிருக்கிறாராம்.
இதை வைத்துப் பார்க்கும் போது தளபதி திரைப்படத்தை தான் இவர் தற்பொழுது இயக்க போகிறார் அதனால் தளபதி 65வது திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.