தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி. தற்போது நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் மாஸ்டர்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது மாஸ்டர் திரைப்படம். இத்திரைப்படம் இதுவரையிலும் 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயின் 65வது திரைப்படத்தைப் பற்றிய ஏதாவது அப்டேட் வருமா என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். இப்படத்தை நெல்சன் இயக்கத்தில் சன்ரைசர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் உறுதியானது.
இதனை அடுத்து நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டு இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
இப்படத்தினை பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.