ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 65 பஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

vijay 65

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள்  பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கடைசியாக வெளியாகிய மாஸ்டர் திரைப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற்றது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இன்று தளபதி பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக சன் பிக்சர் நிறுவனம் தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பிரபலங்கள் இடையே வைரலாகி வருகிறது. விஜய் தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார் அதனை கொண்டாடும் விதமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குதூகலம் அடைய வைத்துள்ளது.

மேலும் நெல்சன் திலீப்குமார் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அது மட்டும் இல்லாமல் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

beast
beast