Thalapathy Vijay: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவி விஜய் வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது புஸ்ஸி ஆனந்த் கத்த அதற்கு விஜய் அமைதியாக இருக்கும்படி கூறியது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி வரலாறு கானாத கனமழை பெய்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது எனவே மக்கள் தற்பொழுது தங்க இடமும் உண்ண உணவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏழு அடிக்கு தண்ணீர் தேங்கியதால் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது மேலும் பலரும் ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். எனவே நிவாரண பொருட்களை மக்களுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் படகுகள் மூலம் சென்று வழங்கினர்.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழா நெய்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் மாதா மஹாலில் நடைபெற்றது. அப்பொழுது உதவி பெற வந்த ஒரு மூதாட்டி யாருப்பா விஜய்.. யாருப்பா விஜய்.. என கேட்டுக்கொண்டே மேடையின் மீது அங்கும் இங்கும் ஓடினார்.
அவரைப் பார்த்து அன்போடு சிரித்த விஜய் நான் தான் என்று சொன்னார் .உடனே அந்த மூதாட்டி விஜய்யின் கண்ணத்தை பிடித்து கிள்ளி கைகளை பிடித்தார். இதனை பார்த்து கடுப்பான புஸ்ஸி ஆனந்த் டேய் கூப்பிட்டு போங்கடா என ஆத்திரமடைந்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் கூல்.. கூல்.. எனக்கூறி அனைவரையும் பின்னால் போக சொல்லி புஸ்ஸி ஆனந்தையும் அமைதி படுத்தினார் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.