தளபதி 66 போஸ்டர் கூட காப்பியா..? இணையத்தில் லீக்கானது இயக்குனரின் புளிப்பு..!

thalapathi66
thalapathi66

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவ்வாறு பிரபலமான நடிகர் தமிழில் ஏராளமான திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் நிறைய படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் இடம் பிடிக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் என்ற திரைப்படமானது சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை.இந்த திரைப்படத்தில் நடிகை பூஜாவுக்கு கதாநாயகியாக நடித்து அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்கள்தான் இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய 66வது திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை தில் ராஜு அவர்கள் தான் தயாரித்து வருகிறார்.

மேலும் தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள் அந்த வகையில் சரத்குமார் குஷ்பூ இன்னும் பலர்.  இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகிய இரண்டும் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய் அவர்கள் கோட் ஷூட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பாஸ் போன்று அமைந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தில் த பாஸ் ரிட்டர்ன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் இந்த புகைப்படத்தின் போஸ்டரின்ன் பேக்ரவுண்டு கூகுளில் சர்ச் செய்து பார்த்த பொழுது அவை கூகுளில் இருந்து எடுக்கப்பட்ட பேக்ரவுண்டு என்பது நன்றாகவே தெரிந்து விட்டது. இந்நிலையில் இவ்வாறு வெளிவந்த இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சமீபத்தில்தான் ரஜினியின் ஜெய்லர் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது இந்நிலையில் தற்போது விஜய் போஸ்டரும் இந்த நிலைமைக்கு ஆளாக்கியது ரசிகர்களுக்கு பெரும் மனக் கஷ்டத்தை உண்டாக்கி விட்டது.