thalapathi vijay son night traveling video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் புதுமுக நடிகர்களுக்கு முன்னோடியாகவும் வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கொடுத்த திரைப்படம்தான் மாஸ்டர் தற்போது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளார்.
இவ்வாறு தளபதி விஜய் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பொழுதே தளபதி விஜய்யின் மகன் சினிமாவில் நடிக்க போவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை.
சமீபத்தில்கூட விஜய் சேதுபதி தளபதி விஜயின் மகனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க போவதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் விஜய்தரப்பினரிடமிருந்து அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என கூறிவிட்டார்கள்.
இந்நிலையில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்யின்ன் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். இவ்வாறு அவர் படிக்கும் பொழுதே அவர் இயக்குனராக அறிமுகமாக போகிறார் நடிகராக அறிமுகமாகி போகிறார் என செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இரவில் காரில் உலாவரும் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளன இந்த வீடியோவில் நடிகர் விஜய்யின் மகன் காருக்குள் அமர்ந்து கொண்டு மியூசிக் கேட்டுக் கொண்டே ஜாலியாக தலையாட்டிக் கொண்டே இருக்கிறார்.
இவ்வாறு வெளிவந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
My videos are out 😍#SanjayVijay #ThalapathyVijay pic.twitter.com/hBn6SUgUld
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 2, 2021