தளபதியின் பெயர் விஜய் என மாற்றம் செய்ததற்கு இதுதான் காரணம்..! மேடையில் உண்மையை உடைத்த எஸ் ஏ சந்திரசேகர்..!

vijay-name-1
vijay-name-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர்தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டவர் அந்த வகையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீசஸ்ட என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக சினிமா பிரபலங்களை பற்றி புது புது விஷயங்கள் வெளியாகி வருகிறது.

தளபதி விஜயை பற்றி பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைதள பக்கத்தில் அம்பலமாகியுள்ளது. அந்த வகையில் விஜய்யின் தந்தையார் சந்திரசேகர் அவர்கள் தளபதி விஜயின் ஜாதியை பற்றி கேட்டால் நான் கோபம் கொண்டேன் என  கூறியது பெரிய சர்ச்சைக்கு  உள்ளாக்கியது.

அதுமட்டுமில்லாமல் தளபதி  பெயர் விஜய் என வைப்பதற்கு  என்ன காரணம் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது இதனை  விஜயின் தந்தையார் சந்திரசேகர் அவர்கள் மேடை  ஒன்றில் கூறியுள்ளார். அந்தவகையில் ஹிந்தி பட கதையாசிரியர் சலீம்  அவர்கள் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பாராம்.

அதேபோல மற்றொரு கதை ஆசிரியரான அமிதாப் என்பவரும்  கதாநாயகனுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார். இதனைத்தொடர்ந்து சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய மகனான தளபதிக்கும் இந்த பெயரை வைத்துள்ளாராம்.

அந்தவகையில் விஜயை பற்றி வரும் சர்ச்சைக்கு இனிமேல் நான் கவலை பட போவது இல்லை நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் சரியான பதிலும் இருப்பதாகவும் சந்திரசேகர் அவர்கள் இணையத்தில் கூறியுள்ளார்.

vijay dad-1
vijay dad-1