தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார். சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வருவதால் விஜயை வைத்து பல இயக்குனர்கள் படத்தை இயக்க ஆசைப்படுகிறார்கள்.
அந்த லிஸ்டில் தற்போது விஜய்யின் மகன் இணைந்துள்ளார். தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதனைத் தொடர்ந்து தளபதி 66 திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
விஜய் தனது 66 திரைப்படத்திற்காக இயக்குனர்களை தேடி கொண்டிருப்பதால் அதனை அறிந்து கொண்ட விஜயின் மகன் சஞ்சய் நாம் சேர்ந்து ஒரு திரைப்படம் பண்ணலாமா என விஜய்யிடம் கேட்டுள்ளார் இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மகன் சஞ்சய் கனடா நாட்டில் சினிமா துறைக்கு ஏற்ற படிப்புகளை படித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமில்லாமல் சஞ்சய் சமீபத்தில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இந்த நிலையில் தனது அப்பா விஜய்க்காக ஒரு மாஸ் கதையை ரெடி செய்து வைத்துள்ளாராம் இது சம்பந்தமாக விஜயுடன் பேசி விட்டதால் தளபதி 66 இயக்குனருக்கான எதிர்பார்ப்பு மற்றும் யார் இயக்கப் போகிறார் என்ற சலசலப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது.
தளபதி 66 திரைப்படத்தில் விஜய் தன்னுடைய மகன் உடன் கூட்டணி வைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம். அதற்காக தற்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..