சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் வெளிவரும் தளபதி 65 திரைபடத்தில் எழுந்த புது பிரச்சனை..!

thalapathi vijay latest update: தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய்.  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று தந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய 65வது திரைப்படத்தில் நடிக்க உன் வந்துவிட்டார்.

தளபதியின் 65வது திரைப்படத்தை முதலில் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகின ஆனால் அட்லீ இயக்க போகிறார் என கூறப்பட்டது பின்னர் இவர் இயக்கத்திலும் நடிக்காமல் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

இவ்வாறு உருவாகும் தளபதி 65 திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே இணையத்தில் வெளிவந்துவிட்டது இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 திரைப்படத்தில் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளன.

இவ்வாறு வெளிவந்த இந்த போஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் தளபதி விஜய்க்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். தளபதி சிக்ஸ்டி பைவ் திரைப்படத்தின் டைட்டில் ஆனது பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

தளபதி விஜய் இதற்கு முன்பு லவ் டுடே ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என பல்வேறு திரைப்படங்களில் ஆங்கில பெயரை தலைப்பாக வைத்து உள்ளார். அதேபோல தற்போது நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளது இவ்வாறு தளபதி விஜய் தமிழில் நடித்தாலும் தன்னுடைய படத்தின் பெயரை ஏன் ஆங்கிலத்தில் வைக்கிறார் என்பது புரியவில்லை.

இவ்வாறு பிகில் படத்தை தொடர்ந்து பீஸ்ட் என இவரின் 65வது திரைப்பட டைட்டில் வைத்தது சரியா என பிரபல அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளார்.  ஏற்கனவே சர்க்கார் திரைப்படத்தில் இவர் புகை பிடிப்பதை பார்த்து பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளார்கள் இந்நிலையில் திரைப்படத்தில் என்னென்ன பிரச்சனை வரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

beast
beast