தளபதியின் இந்த மெகா ஹிட் திரைப்படத்தின் கதை என்னுடையது..! பல வருடம் கழித்து வம்பு இழுக்கும் இயக்குனர்..!

vijay-priyamanavale
vijay-priyamanavale

thalapathi this movie story copy for my movie : தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் பல மெகா ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது

அப்படி ஹிட்டடித்த திரைப்படம்தான் பிரியமானவளே. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இன்று திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் என்னுடைய கதை என ஒரு இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது பிரபல இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜ் தான்.

இவர் 1985ஆம் ஆண்டு திறமை எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் கதையும் பிரியமானவளே திரைப்படத்தின் கதையும் ஓற்றுப் போகிறது என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இறுதியில் நடிகை ஒரு குழந்தைக்கு தாயான பிறகு திருமணம் செய்து கொள்வது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் மற்றொரு தெலுங்கு திரைப்படமான இல்லால் எனும் திரைப்படத்தின் கதையும் இந்த திரைப்படத்தின் கதையுடன் ஒத்துப் போகிறது என கூறி உள்ளார்.

இவ்வாறு இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜ் கூறிய தகவலானது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது அதுமட்டுமல்லாமல் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

vijay kirushna raj
vijay kirushna raj