தளபதியுடன் நடிப்பதற்க்காக தவமாய் தவமிருந்து காத்திருக்கும் நடிகைகள் மத்தியில் தளபதியின் பட வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல முன்னணி நடிகை..!

vijay-1

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தளபதியுடன் ஜோடி சேர்ந்தவர் தான் பூஜா ஹெக்டே இவ்வாறு இந்த திரைப்படம் படபிடிப்பானது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகிக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் தளபதி விஜய் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கொடுத்தார். அந்த வகையில் தளபதி விஜய் தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் கதை விஷயத்தில் மிகவும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். ஏனெனில் தன்னுடைய படம் என்றாலே தன்னுடைய ரசிகருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமென்பதற்காக என பலர் கூறி வருகிறார்கள்.

அதே போல தான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகள் மற்றும் இளம் நடிகைகள் என பல்வேறு நடிகைகளும் தளபதி விஜயுடன் ஜோடி போட்டு நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஆனால் விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை தூக்கி போட்டபோனவர்தான் நடிகை ஜோதிகா.

நடிகை ஜோதிகா அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் காஜல் அகர்வால் சமந்தா ஆகியோர் நடித்தார்கள்.  இந்த திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் ஜோதிகாவிற்கு பிடிப்பதன் காரணமாக நடிக்காமல் போய்விட்டாராம்.

ஏற்கனவே விஜய்யுடன் குஷி என்ற திரைப்படத்தில் ஜோதிகா இணைந்து நடித்துள்ளார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இன்றளவும் அந்த திரைப்படத்தை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.ஏனெனில் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் ஜோதிகாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்.

vijay-1
vijay-1