Thalapathy 67 : விஜய்க்கு வில்லன்னாக நடிக்க அர்ஜுன் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா.? வெளியே கசிந்த தகவல்..

vijay-arjun
vijay-arjun

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய். இவர் அண்மைக்காலமாக நடிக்கும்  படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 66-வது திரைப்படமான வாரிசு. திரைப்படத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதையாக உருவாகியுள்ளது.

படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே சூப்பராக நடித்துள்ளது. படம் செம்ம மாஸாக   வந்துள்ளது அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பூஜை அண்மையில் போடப்பட்டது ஆனால் அந்த பூஜையின் புகைப்படங்கள் ஒன்னு கூட வெளிவரவில்லை..

இதனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியப்படாமலேயே சஸ்பென்ஸ் ஆக படக்குழு வைத்து இருக்கிறது.ஆனாலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார் என அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டு வருகிறது. அர்ஜுன் நடிக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் இந்த படத்திற்காக அர்ஜுன் மிகப்பெரிய ஒரு தொகையை கேட்டிருக்கிறாராம்.

அது குறித்தும் தகவல் வந்துள்ளது. தளபதி 67 பாடத்தில் நடிக்க அர்ஜுன் கிட்டத்தட்ட 4.5 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் படக்குழு சைடுல இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.