துப்பாக்கி படத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்பை.. தளபதி 67 படத்தில் தட்டி தூக்கிய இளம் நடிகை.

vijay
vijay

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இந்த வெற்றியை அண்மையில் கூட படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த சந்தோஷத்தோடு தளபதி விஜய் அடுத்ததாக அவரது 67வது திரைப்படத்தில் லோகேஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளார் அதற்கான அப்டேட்டுகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதன்படி இந்த படத்தை லோகேஷ் இயக்க அனிருத் இசை அமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, பிரியா ஆனந்த் போன்ற பல நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். தளபதி 67 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்க உள்ளது  இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் உடன் கில்லி படத்தில் ஜோடி போட்டு நடித்த திரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு தளபதி 67 படத்தில் இணைகிறார்

அது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து நடிகை பிரியா ஆனந்த் முதல் முதலாக விஜய் உடன் இந்த படத்தில் இணைய உள்ளார். இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக முதலில் பிரியா ஆனந்த் தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால் அந்த வாய்ப்பு அப்போது கை நழுவ இப்போது தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பே ப்ரியா ஆனந்த் பெற்றுள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் மற்றும் ரசிகர்களும் இவர்களது காம்போவே பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர்..

priya ananth
priya ananth