தளபதி விஜயுடன் நடனமாட தயாராகும் பூஜா ஹெக்டே.! புதிதாக வெளிவந்த தளபதி 65 திரைப்படத்தின் அப்டேட்.!

thalapathi 65
thalapathi 65

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு விட்டு மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் தெலுங்கு,மலையாள சினிமாக்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தற்போது சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தளபதி 65 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.  இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெறுவதற்காக செட்டுகள் போடப்பட்டது ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமாக இருந்ததால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கொரோனா கொஞ்சம் குறைந்துள்ளதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஜூலை மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க படக்குழுவினர்கள் திட்டம் போட்டு உள்ளார்கள். அந்தவகையில் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ஒரு செட் அமைத்து வேலைகள் நடைபெற்று வருகிறது.  குறைந்த ஆட்களை வைத்து இரண்டு வாரங்களாக சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அந்த செட்டில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்தவகையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாட உள்ளார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் இந்த ஆண்டிற்குள்  முடியும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீசாகும் என்றும் படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.