thalapathy vijay 65th movie: இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மில்லியன் அளவு பார்வையாளர்களை பார்க்கச் செய்தது.
இந்த படம் சீக்கிரம் வெளியாகுமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் தளபதி 65 வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் கேள்வியாக ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் மற்றும் ஒளிப்பதிவளராக மனோஜ் பரஹம்சா பணியாற்ற உள்ளார் என்றும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பற்றி அதிகாரபூர்வமாக தகவல் வருமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தகவல் தற்பொழுது விஜயின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.