தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் ஆரம்பத்தில் பல தோல்விகளையும் சில வெற்றிகளையும் சந்தித்து வந்தார்.
அதன்பிறகு தனது சிறந்த நடிப்பினாலும் தனி ஸ்டைலினாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளிவரும் எந்த திரைப்படமாக இருந்தாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.இத்திரைப்படம் வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று உலகமுழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் குமார் இயக்கி வருகிறார்.அந்த வகையில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு இவரைத் தொடர்ந்து டிக்டாக் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தில் புதிதாக வில்லனாக பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார் என்று வெளிவந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து தற்போது மற்றொரு வில்லனாக பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம் இந்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.