பக்கா மாஸாக வெளிவந்த தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! மரண மாஸ்..

vijay 01

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் விஜய்.  இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருவதால் வருடம் வருடம் இவரின் ஒவ்வொரு பிறந்த நாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தளபதி விஜயை பற்றிய பல தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த ஒரு நாளுக்காக விஜய்யின் ரசிகர்கள் பல காலங்களாக காத்து வந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்றைய நாள் அமைந்துள்ளது.

கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து காமெடி நடிகர் யோகி பாபு, டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் படக்குழுவினர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள்.

thalapathi 65 movie
thalapathi 65 movie

அந்த வகையில் இன்று தளபதி விஜயின் 47-வது பிறந்த நாள் என்பதால்  டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் ரசிகர்களுக்கு சப்ரைஸ் தரும் வகையில் தளபதி 66 திரைப்படத்தினை பற்றிய அப்டேட் நாளை வெளிவர உள்ளது முதன்முறையாக தளபதி விஜய் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்பொழுது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.