எப்பா சாமி ஆள விடுங்க நீங்க கதை சொன்னவரை போதும் முருகதாஸை துரத்தி விட்ட விஜய்.! தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா.?

thalapathy-65
thalapathy-65

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாக வில்லை.

இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், அந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்க இருக்கிறார் என பலரும் கூறிய நிலையில் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கு முன் விஜய் ஏ அர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, துப்பாக்கி, சர்கார் என  மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்து விட்டார், இந்த நிலையில் மீண்டும் விஜயிடம் கதையை கூறியுள்ளார் முருகதாஸ் அந்த கதையில் முதல் பாதி அருமையாகவும் இரண்டாம் பாதி மிகவும் சொதப்பலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால் இரண்டாம் பாதியில் கதையில் மாற்றம் செய்ய சொல்லி விஜய் கேட்டுள்ளார், ஆனால் முருகதாஸ் கதையை மாற்றி விட்டேன் என மீண்டும் பழைய கதையையே நோண்டி சின்னச் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் கூறியுள்ளார், இரண்டாம் பாதி அப்படியே இருந்ததால் முருகதாஸ் வேண்டாம் என அதிரடியாக முடிவு எடுத்து தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம் விஜய்.

ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் சன் பிக்சருக்கும், முருகதாஸிற்கும் சர்க்கார் திரைப்படத்தின் பொழுத ஏற்பட்ட பிரச்சனையால் தான் முருகதாஸ் விலகிவிட்டார் என விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டது மட்டும் உறுதியாகியுள்ளது இந்த நிலையில் தளபதி 65 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அடுத்ததாக விஜயை வைத்து மகிழ்திருமேனி இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. எது எப்படியோ அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க தான் வேண்டும்.