என்னை அம்மாவா பாத்தீங்கன்னா என் இதயத்தில் உங்களுக்கு இடம் இருக்கும் பொம்பளையா பாத்தீங்கன்னா…! இணையத்தில் பட்டையை கிளப்பும் தலைவி ட்ரைலர்.!

kangana-ranaut
kangana-ranaut

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத்  இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு தலைவி என டைட்டில் வைத்துள்ளார்கள். முதலில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பல இயக்குனர்கள் இயக்குவதாக அறிவித்திருந்தார்கள் ஆனால் தலைவா கிரீடம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இந்த இந்த தலைவி திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில்  தலைவி திரைப்படத்திலிருந்து ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரணாவத் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரைலரில் அச்சு அசல் ஜெயலலிதாவை உரித்து வைத்தது போல் நடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

சொல்லப்போனால் ஜெயலலிதா கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள். அதேபோல் MGR போல் அரவிந்த் சாமி நடித்துள்ளார்  இந்த திரைப்படத்தில் பல உண்மைகள் இலைமறைகாயாக பேசப்பட்டுள்ளதாள் அரசியலில் ஏதாவது சலசலப்பை ஏற்படுமா என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பிவிட்டது.

இந்த நிலையில் இந்த தலைவி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியானால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.