தலைவர் 171 கதை எழுதுவதற்காக லோகேஷ் கனகராஜுக்கு பல வசதிகளை செய்து கொடுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா?

thalaiver 171
thalaiver 171

Thalaiver 171: லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் 171வது படத்தின் கதை எழுதுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்து கொடுத்திருக்கும் வசதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வயதானாலும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமல் அதே கெத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் இணைந்துள்ளார். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது.

அப்பத்தாவை கொன்றது ஜீவானந்தம் இல்லை.. குணசேகரனுக்கு ட்விஸ்ட் வைத்த எஸ்.கே.ஆர்.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

எனவே லோகேஷ் ரஜினிகாந்தின் கூட்டணி சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் தனது 170வது படத்தினை இயக்குனர் த.செ ஞானவேலிடம் ஒப்படைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சூட்டிங் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மன்சூர் அலிகான், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி ஆகியோர்கள்நடிக்க அனிருத் இசை அமைக்கவுள்ளார்.

இதற்கான படப்பிடிப்புகளை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171வது படத்தில் இணையவுள்ளார். இப்படத்தை  பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்க இருக்கும் நிலையில் தற்காலிகமாக இப்படத்திற்கு தலைவர் 171 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கேப்டன்.! என்ன ஆனது? விஜயகாந்தின் தற்போதைய நிலை..

இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியினை ரஜினிகாந்த் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 171-வது படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வசதி செய்து கொடுத்திருக்கிறதாம். அதாவது லோகேஷ் கனகராஜ் தலைவர் 171வது படத்துக்கு கதை எழுதுவதற்காக பெசன்ட் நகர் பீச்சில் ரூம் ஒன்றை போட்டுக் கொடுத்திருப்பதாகவும் அந்த ரூமின் வாடகை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.