Lokesh kanagaraj: குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்து இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தினை இயக்க இருக்கிறார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அடுத்த பட பணிகளை ரஜினி துவங்க இருக்கிறார். விக்ரம், லியோ என சூப்பர் ஹிட் படங்களை தந்து வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் அவருடைய 171வது படத்தை தரமான கதையம்சத்துடன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்த அசத்திய விஜயகாந்த்..! இதோ முழு லிஸ்ட்.
தலைவர் 171வது படத்தினை பற்றி பேசும்பொழுது, இதில் என்னுடைய படங்களில் வழக்கமாக இருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற விஷயங்கள் இருக்காது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் இது ஒரு மாசான திரைப்படமாக தான் இருக்கும் அது அப்படித்தான் இருக்க வேண்டும் இது முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு கமர்சியல் திரைப்படம் என தெரிவித்தார்.
இவ்வாறு தலைவர் 171-வது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் கார்த்தியை வைத்து கைது 2 படத்தின் பணிகளை துவங்க உள்ளார். இந்த படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லியோ படத்தின் இரண்டாவது பாகம் பாகமும் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள விட்டுட்டு போயிட்டியே அண்ணா.. விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத சத்யராஜ்.!
ஏற்கனவே லியோ இரண்டாவது பாகத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளதாகவும் தலைவர் 171 மற்றும் கைது 2 ஆகிய இரண்டு படங்கள் முடிந்தவுடன் லியோ படத்தின் பணிகள் துவங்கும் எனவும் கூறப்படுகிறது. லியோ படம் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் மாஸாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.