தளபதி விஜய் தற்போது பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார். திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பல முக்கிய பிரபலம் நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ரசிகர்களிடம். மேலும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக பார்த்துக் கொள்ளும் புகைப்படம் வெளியாகியது.
இந்த புகைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து செய்தார்கள். மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த நிலையில் பிரபல நிறுவனமான A2 ஸ்டுடியோ கற்பனை செய்து பாருங்கள் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த புகைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆக்ரோஷமாக பார்க்கும்படி இருக்கிறது. மேலும் தலைவர் vs தளபதி என அந்த நிறுவனம் போட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமா பார்வையாளர்களுக்கு பாக்ஸ் ஆபீசிலும் உலகை சிதறடிக்கும் தருணமாக அமையும் என வாசகம் எழுதியுள்ளார்கள்.
மேலும் அப்படி நடக்கும் எதிர்காலத்திற்காக காத்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்கள்.
Imagine just #Thalaivar v #Thalapathy ? It will be an earth shaterring moment for Indian Cinema Audience as well in BO ? Lets wait for the Future ? #Kaala #Master pic.twitter.com/3QrbGLkmQL
— A2 Studio (@a2studoffl) January 27, 2020