Thalaivar 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால் ரஜினி அடுத்த திரைப்படம் ஹிட் கொடுக்க வேண்டிய நிலைமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
நெல்சனுக்கும் கடைசி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டினார் ஜெய்லர் திரைப்படம் கிட்டதட்ட 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டியது அதனால் பாடத்தில் நடித்த ரஜினி, படத்தை இயக்கிய நெல்சன், படத்திற்கு இசையமைத்த அனிருத், என அனைவருக்கும் கார் பரிசுகள் என தயாரிப்பு நிறுவனம் அள்ளிக் கொடுத்தது.
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியா ரோல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஞானவேல் ராஜா இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் 170-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளியானாலும் தலைவர் 171 வது திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது அதற்கு காரணம் அந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து எப்பொழுது தொடங்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் தலைவர் 171 வது திரைப்படம் லோகேஷ் கனகராஜ் அனிருத் சன் பிக்சர் ரஜினி என மெகா கூட்டணியில் உருவாக இருக்கிறது. பொதுவாக லோகேஷ் திரைப்படம் என்றாலே அறிவிப்பு வெளியாகும் முன்பு ஒரு சின்ன முன்னோட்டத்தை வெளியிடுவார் ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் என்றாலும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சைலண்டாக வெளியானது இது லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ என அனைத்து திரைப்படங்களிலும் நடிகர்களின் ஹேர் ஸ்டைல் லுக் என அனைத்தையும் மாற்றி மிரட்டலாக காட்டியிருந்தார் இந்த நிலையில் ரஜினியின் 171 வது திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வேற ஒரு லுக்கில் காமிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.
அப்படி இருக்கும் நிலையில் ஒரு போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி
வருகிறது இந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 திரைப்படத்தில் சிட்டி கேட்டப்பில் இருக்கும் ரஜினியை இன்னும் கொஞ்சம் மாற்றி தெரிமாசாக வெளியிட்டுள்ளார்கள் இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கிரியேட் செய்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது இதோ அந்த போஸ்டர்.