Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம். படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி..
த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ திரைப்படம் இதுவரை மட்டுமே சுமார் 480 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.
லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளி உள்ளதால் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வெற்றி விழா நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ திரைப்படம் குறித்தும், தான் அடுத்த இயக்க உள்ள தலைவர் 171 திரைப்படம் குறித்தும் பேசி உள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்.. சின்ன வயசிலே இருந்து பார்த்து வளர்ந்த ரஜினி சார் கிட்ட எனக்கு பயங்கரமா பிடிச்ச விஷயமே ரஜினியின் VILLANISM தான்..
அதை எவ்வளவு காமிக்க முடியுமோ அவ்வளவு என்னோட தலைவர் 171 படத்துல காமிக்க முயற்சி செய்கிறேன் என கூறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தில் எப்படி சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்தாரோ அப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரஜினி வில்லனாக நடித்தால் செம்ம சூப்பராக இருக்கும் என கூறி கமெண்ட் அடித்து வருக்கிறனர்.