தலைவர் 171-ல் மொத்த சம்பவத்தையும் லோட் செய்யப் போகும் லோகேஷ் கனகராஜ்.! சன் பிக்சர் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.!

thalaivar 171
thalaivar 171

Thalaivar 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கிட்டத்தட்ட 7000 திரையரங்கிற்கு மேல் வெளியாகிய இந்த திரைப்படம் வசூலில் 650 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இன்னும் ஜெயிலர் வசூல் குறைந்தபாடில்லை ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகியும் ஜெய்லர் இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

ஏற்கனவே சன் பிக்சர் நிறுவனம் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் ரஜினி, நெல்சன் , அனிருத் ஆகியவர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்தார்கள் அது மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த கலைஞர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக கொடுத்து அவர்களையும் சிறப்பித்தார்கள் ஏற்கனவே படத்தில் நடித்த சிறு கலைஞர்களை சன் பிக்சர் கண்டு கொள்ளவே இல்லை என குற்றம் சாட்டு இருந்தது இந்த நிலையில் சன் பிக்ச்சர் நிறுவனம் அதையும் நிவர்த்தி செய்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் ரஜினி அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கேமியா ரோலில் தான் ரஜினி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெய்லர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் லால் சலாம் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைவர் 171 ஆவது திரைப்படமான லோகேஷ் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இணைந்துள்ளார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது அதில் 171 என்ற நம்பரில் ரத்தம் தெரிந்துள்ளது அதனால் லோகேஷன் எல்சி யூ வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக தெரிகிறது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக தான் உருவாக இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் அவர்கள் திட்டம் போட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நடிகரை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அவர் யார் என்ற விவாதம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.thalaivar 171 movie