அம்மாடியோ தலைவர் 170 -ல் வில்லன் இவரா.! இவர் பாகுபலிக்கே டப் கொடுத்தவராச்சே தாக்குப் பிடிப்பாரா சூப்பர் ஸ்டார்.!

thalaivar 170 villan
thalaivar 170 villan

Thalaivar 170: இளம் நடிகர்கள் முன்னணி நடிகர்கள் என எத்தனையோ பேர் இருந்தாலும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. எத்தனை இளம் நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இணையாக டப் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கய ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆரம்பத்தில்  பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை அதற்கு காரணம் தலைவர் 171-வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் அதனால் ஞானவேல் ராஜா திரைப்படம் பெரிதாக தெரியவில்லை.

ஆனால் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு டப்  கொடுக்கும் வகையில் களம் இறங்கியுள்ளார் ஞானவேல் ராஜா. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் அமிதாப்பச்சன் 32 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார் தலைவர் 170 வது திரைப்படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் படத்தில் ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், என கமிட் ஆகியுள்ளார்கள் இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா ரகுபதி ரஜினியின் 170-வது திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். தலைவர் 170 வது திரைப்படத்தில் ரானா ரகுபதி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது கண்டிப்பாக இந்த திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

Rana Daggubati
Rana Daggubati