அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தார்கள்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சனங்களையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஏமாற்றம்தான் இந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டாரை இயக்கும் அடுத்த வாய்ப்பில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.
இந்தநிலையில் தலைவர் 169 திரைப்படத்தின் இயக்குனர் எதிர்பாராதவிதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது இந்த திரைப்படத்தையும் சன் பிக்சர் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது இந்த நிலையில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் தலைவர் 169 திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனருடன் கைகோர்க்கிறார் ரஜினி.
அதனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் இதுவரை வெளியிடாமல் இருந்து வருகிறார்கள் ரஜினிக்கு ஜோடியாக எந்த நடிகையை போடலாம் என தேடுதல் வேட்டையில் படக்குழு இறங்கியுள்ளது.
பிரியங்க அருள் மோகன் இதற்கு முன்பு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.