தலைவா 2 உருவாகுமா.? ரசிகர்களின் கேள்விக்கு முதல்முறையாக பதில் அளித்த ஏ எல் விஜய்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் இப்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக  நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தலைவா இந்த படம் வெளியாகி இத்துடன் 9 வருடங்கள் ஆகியுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசதி வருகின்றனர். தலைவா படம் விஜய் கேரியரில் மிக முக்கியமான படம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருந்தது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து அமலா பால், சத்யராஜ், சந்தானம், பொன்வண்ணன் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர்.

இந்த படம் ரிலீஸ் ஆக படாத பாடுபட்டது மற்ற மாநிலங்களில் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்திருந்தாலும் தமிழகத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படவில்லை பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக சில நாட்கள் கழித்து தான் இந்த படம் தமிழில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார்.

இந்த படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனப்படமாக இருந்தது. இப்பொழுது கூட ரசிகர்கள் தலைவா 2 படத்தை எப்பொழுது எடுப்பீர்கள் என கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தலைவா படத்தின் 9 ஆண்டு நிறைவு குறித்து இயக்குனர் ஏ எல் விஜய் சில தகவல்களை கொடுத்துள்ளார். அதாவது மீண்டும் விஜயோடு இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது வேறு ஒரு ஸ்கிரிப்டுக்கு என்னை எப்பொழுது அவர் அழைக்க வேண்டுமென விஜய் சாருக்கு தெரியும்.

தற்போது என்னிடம் ஒரு ஸ்க்ரிப்ட் தயாராக உள்ளது எதிர்காலத்தில் இந்த விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன் அது மட்டுமல்லாமல் நான் எங்கு சென்றாலும் தலைவா 2 எப்பொழுது என்று கேள்வி கேட்டு வருகின்றனர் என ஏ எல் விஜய் கூறினார். அப்படி என்றால் ஏஎல் விஜய் வைத்திருக்கும் ஸ்க்ரிப்ட் தலைவா 2 படத்திற்கான கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் இப்பொழுது கூறி வருகின்றனர்.