2006 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் தலைநகரம் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்கு டி இமான் தான் இசை அமைத்திருந்தார்.
தலைநகரம் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கியது முதல் பாகத்தில் சுந்தர் சி தான் ஹீரோவாக நடித்திருந்தார் அதேபோல் இரண்டாவது பாகத்திலும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.
தலைநகரம் முதல் பாகத்தில் சுந்தர் சி பேண்ட் ஷர்ட் போட்டுக் கொண்டு மிகவும் ஸ்டைலிஷ் கேங்ஸ்டராக நடித்திருந்தார் ஆனால் இரண்டாவது பாகத்தில் கருப்பு வேட்டி கருப்பு சட்டை என கிட்டத்தட்ட சிம்புவின் பத்து தலை திரைப்படத்தில் சிம்புவின் கெட்டப்பில் தான் தற்பொழுது சுந்தர் சி யும் இருக்கிறார்.
மேலும் சில நெட்டிசங்கள் அச்சு அசல் சிம்புவை அப்படியே காப்பி அடித்து உள்ளார்கள் என கூறுகிறார்கள் ஆனாலும் அதிரடி கேங்ஸ்டர் கதாபாத்திரமாக இல்லாமல் மிகவும் சைலண்டான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தான் சுந்தர்சி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என தற்பொழுது வெளியாகி உள்ள sneak பீக் வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
அதேபோல் தலைநகரம் இரண்டாவது பாகத்தை இயக்குனர் துரை தான் இயக்கியுள்ளார் ஜிப்ரான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய டான் அசோக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சுந்தர் சி க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார் மிகப்பெரிய எதிர் பார்ப்புக்குள் இருக்கும் இந்த திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி ஆன நாளை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.