யோகி பாபு உடன் க்யூட்டாக விளையாடிய தல தோனி.! அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க.. குழந்தையாக மாறிய தருணம்

MS Dhoni
MS Dhoni

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் எல்ஜிஎம் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தினை பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவரது மனைவி சாஷி சிங் தோனியும் இணைந்து கோலிவுட்டில் எல்ஜிஎம் படத்தினை தயாரித்து வருகின்றனர். இதன் மூலம் சினிமாவிற்கு தயாரிப்பாளராக அடி எடுத்து வைக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 10ஆம் தேதி சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் எம்.எஸ் தோனியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னை சேர்த்துக் கொள்வோமாறு யோகி பாபு கேட்டுக்கொண்டார் அதற்கு தோனி சொன்ன வேடிக்கையான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. யோகி பாபுக்கு பதில் சொன்ன தோனி, ராயுடு ஓய்வு பெற்றுள்ளார். எனவே சிஎஸ்கேவில் உங்களுக்கு இடம் உள்ளது நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன் ஆனால் நீங்கள் படங்களில் மிகவும் பிசியாக இருக்கிறீர்கள் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் அவர்கள் மிக வேகமாக பந்து வீசுவார்கள் அவர்கள் உங்களை காயப்படுத்துவதற்காக மட்டுமே பந்து வீசுவார்கள் என்று கூறியுள்ளார்.

ms dhoni
ms dhoni

இதனை அடுத்து மற்றொரு வீடியோவில் எல்ஜிஎம் ஆடியோ வெளியீட்டு விழாவில் கேக் வெட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் யோகி பாபுவும் தோனியும் கேக் வெட்டுகின்றனர் யோகி பாபு கேக்கை வெட்டி கொண்டிருக்கும் பொழுதே தோனி ஒரு கேக் துண்டை எடுத்து சாப்பிடுகிறார். இதனால் யோகி பாபு ஏமாற்றத்துடன் பார்க்கும் பொழுது தோனி சிரிக்கிறார் அதன் பிறகு தோனி அவருக்கு கேக் கூட்டி விடுகிறார்.

இவ்வாறு இந்த வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முக்கிய கேரக்டரில் நடிக்க நதியா அம்மாவாக நடித்துள்ளார் மேலும் யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர்கள் துணை கேரக்டரில் நடித்துள்ளனர்.