Thala vs Thalapathy: தல தளபதி நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து விடமாட்டார்களா என ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். மறுபுறம் தல தான் பெஸ்ட் தளபதி தான் பெஸ்ட் என அடித்துக் கொண்டும் உள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது தல அஜித் நடிப்பில் விடா முயற்சி மற்றும் தளபதி நடிப்பில் கோட் போன்ற படங்கள் உருவாகி வரும் நிலையில் இப்படங்களின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர். இவ்வாறு தல, தளபதி என அடுத்தடுத்து இவர்களுடைய படங்களை இயக்கி ஹிட் கொடுத்த மூன்று இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம்.
இயக்குனர் பேரரசு: இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படங்களை தொடர்ந்து தல அஜித்தை வைத்து 2006ஆம் ஆண்டு திருப்பதி என்ற படத்தை கொடுத்தார் இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
கே.எஸ் ரவிக்குமார்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 1999ஆம் ஆண்டு மின்சார கண்ணா என்ற படத்தை இயக்கியிருந்தார் இப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனை அடுத்து 2002ஆம் ஆண்டு தளபதி அஜித்தை வைத்து வில்லன் என்ற படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார் இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இவ்வாறு இவர்களுடைய கூட்டணியில் இரண்டாவதாக வல்லரசு படம் வெளியாகி இந்த படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
MGR படத்தை வீழ்த்திய சிவாஜியின் திரிசூலம்.! அந்த காலத்திலேயே எத்தனை சாதனைகள் தெரியுமா.?
ஏ.எல் விஜய்: இயக்குனர் ஏ எல் விஜய் 2007ஆம் ஆண்டு தல அஜித்தை வைத்து கிரீடம் என்ற படத்தினை இயக்கினார் இப்படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை பெற்றது. அதன் பிறகு விஜய்யை வைத்து தலைவா என்ற நல்ல படத்தினை இயக்கினார் ஆனால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்ததால் சுமாரான கலெக்ஷனை பெற்றது.